×

வயல்வெளி பள்ளி முகாம்

 

சின்னமனூர், செப். 25: சின்னமனூர் கருங்கட்டான்குளம் வேம்படிகளம் பரவு களத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன திட்டத்தின் கீழ், நெல் உழவர் வயல்வெளிப் பள்ளி முகாம் நடைபெற்றது. இதில், விவசா யிகளுக்கு மண்மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, களை மேலாண்மை குறித்த வகுப்புகள் சின்னமனூர் வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி தலைமையில் துவங்கி நடந்து வருகிறது.

வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சங்கர், வேளாண்மை துணை இயக்குநர் தேன்மொழி ஆகியோரிவ் வழிகாட்டுதலில் பயிற்சி நடத்தப்பட்டது. சென்டெக்ட் காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநர் அருண்ராஜ் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், வேளாண்மை அலுவலர் கௌசிகா ஜிங்க் சல்பேட் உரமிடுதல் குறித்தும் விளக்கமளித்தனர்.

The post வயல்வெளி பள்ளி முகாம் appeared first on Dinakaran.

Tags : Field School Camp ,Chinnamanur ,Karungattankulam ,Vembadikalam ,Field ,School Camp ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்