×

முன்பகை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்: 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது

வடமதுரை, செப். 25: திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு அருகே உள்ள பாண்டியன் நகரில் இரு தரப்பினருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் முன்பகை காரணமாக நேற்று அடிதடி மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டது. இது குறித்து ஒரு தரப்பைச் சேர்ந்த செல்வராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(25), மீனாட்சி (50), விஜயலட்சுமி (20) மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சிவகாமி (50 )பழனியம்மாள் (32) போன்ற ஐந்து பேர் மீதும் எரியோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இரு தரப்பைச் சேர்ந்த உறவினர்கள் எரியோடு காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

The post முன்பகை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்: 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Pandyan Nagar ,Eriodu, Dindigul district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை