×

மேம்பால பணிக்காக வீடுகள் அகற்றம் 6 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: எம்எல்ஏ எபினேசர் வழங்கினார்

 

தண்டையார்பேட்டை, செப்.25: ரயில்வே மேம்பால பணிக்காக வீடுகளை இழந்த 6 பேருக்கு மாற்று வீட்டிற்கான ஒதுக்கீட்டு ஆணையை எபினேசர் எம்எல்ஏ வழங்கினார். கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய், கொடுங்கையூர், எழில் நகர் ஆகிய பகுதிகள் இணையும் இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் மூடப்படும்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அந்த பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பல கி.மீ. சுற்றி செல்வதை தவிர்க்க, பாலம் கட்டும் பகுதிக்கு அருகில் அன்னை சத்யா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த 6 வீடுகள் அகற்றப்பட்டன.

அப்போது, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், பாதிக்கப்பட்ட 6 பேருக்கு மாற்று வீடு வழங்குவதாக கூறி இருந்தார். அதன்படி, மூலக்கொத்தளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாதிக்கப்பட்ட 6 பேருக்கும் வீடு வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. எபினேசர் எம்எல்ஏ கலந்துகொண்டு 6 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், மாமன்ற உறுப்பினர் விமலா, மணிமேகலை, ஏ.டி.மணி, பொன் இளவரசன் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி செயற்பொறியாளர் சுடலை முத்துக்குமார் உள்பட திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post மேம்பால பணிக்காக வீடுகள் அகற்றம் 6 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: எம்எல்ஏ எபினேசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Ebenezer ,Thandaiyarpet ,
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு