×

தினமும் ஒரு கதைவிட்டு டோட்டல் டேமேஜ்: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மலை!

1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணாலம்னு சொல்வாங்க… ஆனா, இங்க ஒருத்தர் 1000 பொய் சொல்லி கட்சியை வழிநடத்திட்டு வர்றாரு… டெய்லியும் வாய்க்கு வந்தத அடிச்சி விடுறாரு… இதுக்கு முட்டு கொடுக்க ஒரு கூட்டம். லெப்ட் ஹாண்ட், ரைட் ஹாண்டுல ஒரு ஆளு வேற. இதுல பத்திரிகையாளர்களை லெப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணுறேன்னு வேற பஞ்ச்… ஐபிஎஸ்ஸா இருக்கும் போது நிறைய லெப்ட் ஹாண்ட்ல வாங்கிட்டு பார்க்காமலே கையெழுத்து போட்டு இருக்காரு போல… அதுனாலதான் எதுவுமே படிக்காம நிறைய பொய் கதை சொல்லி சின்னாபின்னாமாகி வர்றாரு… ஒரு வாட்டி இல்ல.. 2, 3, 4 டைம் கூட தப்பு பண்ணலாம், அதுக்கு இப்படியா… இதுல பேசும்போது அரசாங்கத்தில் உள்ள ஒட்டுமொத்த துறையின் டேட்டாக்களை நுனியில் வைத்திருப்பவர் போன்று ஒரு பில்டப்… ஆனா, உண்மை என்னன்னா அவரோட கட்சி வரலாறே முழுசா தெரியாது.

தமிழ்நாடு மிகப்பெரிய ஜாம்பாவன்கள், அரசியலை கரைத்து குடித்த தலைவர்களை எல்லாம் பார்த்துவிட்டது. ஆனால், தன்னுடைய சுய விளம்பரத்துக்காக தமிழ்நாட்டு வரலாற்றையும், மக்களால் மதிக்கப்பட்ட தலைவர்களையும் கேலிக்கூத்தாக்கி வரும் ஒருவரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததே இல்லை. நடிகர் சந்தானம் படத்தில் ஒரு டயலாக் வரும்… ‘ஊர்ல 10, 15 பிரண்ட்ஸ் வெச்சு இருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஆனா, ஒரே ஒரு பிரண்ட்ட வெச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே… ஐய்யய்யோ…’ என்று. இதுபோலத்தான் ‘ஒரே ஒரு தலைவர வெச்சுக்கிட்டு நாங்கள் படுறபாடு இருக்கே’ என்று பாஜ முன்னோடிகள் புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு பாஜ மாநில தலைவராக உள்ள அண்ணாமலை பித்தலாட்டம் சந்தி சிரித்து வருகிறது.

பொய் சொல்லலாம்… அதுக்குன்னு ஏக்கர் கணக்குலையா பொய் சொல்லுவாங்க… அண்ணாமலை டெய்லியும் விடுற பீட்டர கேட்டா…‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த..’ என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது என்று கிண்டலடிக்கின்றனர் நெட்டிசன்கள். எது எடுத்தாலும் நான்தான் ஜீனியஸ் என்ற போர்வையிலேயே கதை விடுறாரு… எல்லாரும் படிச்சுட்டு வந்து பேசுங்கனு சொல்றாரு.. இவரு எப்படி படிச்சு ஐபிஎஸ் ஆனாருன்னே ஒரே டவுட்டா இருக்கு… அரசியலில் வரலாறு முக்கியம் அமைச்சரே… மற்றவங்களுக்கு பாடம் எடுக்கும்முன் நாம் எந்த நிலையில் இருக்கோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

2 லட்சம் வழக்கு போட்டேன், 20 ஆயிரம் புத்தகம் படித்தேன், தேச பக்தி உள்ளவங்கதான் ரபேல் வாட்ச் கட்டுவார்கள் என்று கூறியது, பில் கேட்டால் பேப்பர் துண்டை காட்டியது, நடைபயணம்னு சொல்லி சொகுசு பஸ் பயணம், அண்ணா மற்றும் பெரியார் குறித்து நடக்காத ஒரு சம்பவத்தை நடந்தது போல் சித்தரித்தது, நாடு முழுவதும் 1.80 லட்சம் முதுகலை பிஜி இடங்கள் உள்ளது என கூறியது, நிருபர்கள் கேள்வி கேட்டால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பதில் கூறாமல் எஸ்கேப்பாகி பல நாட்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமலே பதுங்குவது… இதெல்லாம் அண்ணாமலையின் பொய் பித்தலாட்டங்களின் டிரைலர்தான். மெயின் பிக்சர் நிறைய இருக்கு… அதெல்லாம் விலாவாரியா சொன்னா படிக்குறக்குள்ளேயே நமக்கு மூச்சு வாங்கிடும்… ஏன்னா, தினமும் ஒரு பீட்டர் விடுறாரு…

அண்ணா, முதுகலை பிஜி சீட் சர்ச்சை முடிவதற்குள் மீண்டும் ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை சொல்லி இருக்கிறாரு அண்ணாமலை. திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் 5 அணைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இவரது மூக்கை உடைக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் ஆதாரங்களுடன் அணைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டி உள்ளதை லிஸ்ட் போட்டு அண்ணாமலையின் முகத்திரையை கிழித்து உள்ளார். 1967 முதல் 1976 வரை திமுக ஆட்சியில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதும், அவர் முதல்வராக இருந்தபோதும் 20 அணைகள் கட்டப்பட்டுள்ளது.

பின்னர், 1989-90, 1996-2001, 2006-2011 கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் 22 அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாறு தெரியாம ஒரு ஐபிஎஸ் அதிகாரின்னு சொல்லிட்டு ஊரு ஊரா சுத்திட்டு வரும் அண்ணாமலை பேசி உள்ளார். ஒவ்வொரு முறையும் ஏதாவது உளறி வைப்பார். அதற்கு தகுந்த பதிலடி வந்தபின்பு அந்த டாப்பிக்கை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிடுவார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் காமெடி பீஸ் அண்ணாமலை என விமர்சித்து வருகின்றனர். பல மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி பிடித்த கட்சிக்கு தலைவரா இருக்கிறவரு கிட்ட போய் நீதி, நேர்மை, நியாயம் எதிர்ப்பார்க்கிறது நியாயமாங்க…

நாடு முழுவதும் பாஜவின் ஊழல் முகம், வகுப்புவாத அரசியல் எல்லாம் வெளி வர தொடங்கி விட்டது. பாஜவின் மிரட்டலுக்கு பணிந்த கட்சிகளும் சற்று விழித்து கொண்டுவிட்டன. இதனால் எதிர்க்கட்சிகளை குறை கூறுகிறோம் என்று நினைத்து வாய்க்கு வந்ததை பாஜவினர் அடித்து விடுகின்றனர். இதற்கு சாட்சாத் சாட்சி அண்ணாமலைதான். ஒரு கட்சியை வளர்க்க பல வழிகள் இருக்கு… ஆனால், உண்மைக்கு மாறாக தினமும் பொய்யை சொல்லி வரும் கத்துக்குட்டி அரசியல்வாதி அறிவுரை சொல்வதும், எல்கேஜி குழந்தைகளுக்கு கல்லூரி பாடம் எடுப்பதும் ஒண்ணுதான். தமிழ்நாடு இதுவரை இவ்வளவு கேவலமான, கேடு கெட்ட அரசியலை பார்க்கவில்லை. இதற்கு மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

The post தினமும் ஒரு கதைவிட்டு டோட்டல் டேமேஜ்: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மலை! appeared first on Dinakaran.

Tags : KALYANANA PANNALAMNAMNU ,
× RELATED இயற்கையின் கொடை பிச்சா ‘வரம்’: 8வது...