×

பூமிக்கு வந்த விண்கல் மாதிரிகள்: நாசாவின் திட்டம் வெற்றி

வாஷிங்டன்: பூமிக்கு மிக அருகில் பல நூறு ஆண்டுகளாக சுற்றி வரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோத வாய்ப்புள்ளதாகவும், இது பூமியின் மீது மோதினால் மிக அபாயகரமான விளைவுள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த விண்கல்லை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது.

அந்த சிறுகோளுக்கு பென்னு என்று பெயரிட்ட நாசா, அதை ஆய்வு செய்ய கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஓரிசிஸ் ரெக்ஸ் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி விண்கல்லை கண்காணித்து வந்தது. இந்த விண்கலத்தின் பணி, சிறுகோள்களை ஆய்வு செய்து சுமார் 60 கிராம் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதாகும். ஓரிசிஸ் ரெக்ஸ் இரண்டு ஆண்டுகள் 2 கோடி கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து, 2018 டிசம்பர் 3ம் தேதி பென்னுவை நெருங்கி சென்றது.

பின்னர் தொலைவில் இருந்தபடியே பென்னுவின் மாதிரிகளை தன்னிடமுள்ள கேப்ஸ்யூலில் சேகரித்து வைத்து கொண்டு, 2020ம் ஆண்டு தன் பணியை நிறைவு செய்தது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட விண்கல் மாதிரிகளுடன் ஓரிசிஸ் ரெக்ஸ் விண்கலம் நேற்று பூமியை நெருங்கியது. விண்கலத்தில் இருந்து கேப்ஸ்யூல் பிரிந்து சென்று வளிமண்டலத்தை கடந்து பாராசூட் மூலம் உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியது. அந்த கேப்ஸ்யூலை ஆய்வு நடத்துவதற்காக நாசா விஞ்ஞானிகள் எடுத்து சென்றனர்.

The post பூமிக்கு வந்த விண்கல் மாதிரிகள்: நாசாவின் திட்டம் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Earth ,NASA ,Washington ,
× RELATED ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை