×

அமலாக்கத்துறைக்கு எதிராக ஜார்க்கண்ட் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் மனு

ராஞ்சி: பணமோசடி தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதல்வர் சோரன் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்பதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை முதல்வர் அணுகியுள்ளார். அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

The post அமலாக்கத்துறைக்கு எதிராக ஜார்க்கண்ட் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Jharkhand ,High Court ,Enforcement Directorate ,Ranchi ,Hemant Soren ,Dinakaran ,
× RELATED 14 மக்களவை தொகுதிகளில் 13ஐ இந்தியா...