×

திருச்சி – ராஜஸ்தான் விரைவு ரயிலில் தீ விபத்து: 2 பெட்டிகள் எரிந்து நாசம் பயணிகள் உயிர் தப்பினர்

வல்சாத்: திருச்சியில் இருந்து ராஜஸ்தான் சென்ற விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் வரை ஹம்சபர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குஜராத் வழியாக ராஜஸ்தானுக்கு செல்கிறது. நேற்று வழக்கம்போல் புறப்பட்ட ஹம்சாபர் விரைவு ரயில் மதியம் 2 மணிக்கு குஜராத்தின் வால்சாத் ரயில் நிலையம் சென்றடைந்தது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரயில் இன்ஜினுக்கு பின்னால் இருந்த 2 பெட்டிகளில் தீப்பற்றியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக வௌியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post திருச்சி – ராஜஸ்தான் விரைவு ரயிலில் தீ விபத்து: 2 பெட்டிகள் எரிந்து நாசம் பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Trichy-Rajasthan Express train ,Valsad ,Trichy ,Rajasthan ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு