×

புளியந்தோப்பில் நவீன கால்பந்தாட்ட மைதானம்: அமைச்சர் உதயநிதி துவக்கிவைத்தார்


பெரம்பூர்: சென்னை எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கே.பி. பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ளே ‘’சிங்கார சென்னை 2.0’’ நிதியின் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மதிப்பீட்டில் நவீன கால்பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவுப்பெற்றது.

இதையடுத்து இந்த மைதானம் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். மேலும் பரந்தாமன் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.ேமா. அன்பரசன், பி.கே.சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் வேலு, மாமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி தர், பரிதி இளம்சுருதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post புளியந்தோப்பில் நவீன கால்பந்தாட்ட மைதானம்: அமைச்சர் உதயநிதி துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi ,Pliyanthoph ,Perampur ,Chennai Elampur Constituency GP Park ,Tamil Nadu Urban Habitat Development Board ,Football ,Pleyanthope ,Udhayanidi ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...