×

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி பராமரிப்பு பணி

 

கோவை, செப். 23: கோவை வனக்கோட்டத்தில் கோவை, போளூவாம்பட்டி, மதுக்கரை உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. இதில், யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேவைக்காக வன எல்லையொட்டிய கிராமங்கள், சாலைகளில் சுற்றி வருகிறது. விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், யானைகள் வனத்தில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் கோவை வனக்கோட்டத்தில் 350 கிமீ தூரத்திற்கு அகழிகள் வெட்டப்பட்டது.

மழை, மண் சரிவு, கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் நபர்கள் ஏற்படுத்தும் சேதம் காரணங்களால் அகழி ஆழம் குறைந்துள்ளது. இதனால், யானைகள் எளிதாக அந்த வழியாக வெளியேறி வருகிறது. இதையடுத்து, அகழியை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 150 கிமீ தூரத்திற்கு அகழியை பராமரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தவிர, கூடுதலாக 25 கிமீ தூரத்திற்கு அகழி வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் தற்போது முடியும் நிலையில் இருப்பதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Forest Reserve ,Poluvampatti ,Madhukarai ,Dinakaran ,
× RELATED மழையால் வனப்பகுதியில் வறட்சி நீங்கியது