×

உசிலம்பட்டி அருகே அரசு பஸ்கள் நடுவே ஆட்டோ சிக்கி விபத்து 4 பெண்கள் படுகாயம்

உசிலம்பட்டி, செப். 23: உசிலம்பட்டியில் இருந்து எம்.கல்லுப்பட்டி நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உசிலம்பட்டி அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது அரசு பஸ்சை, உசிலம்பட்டியில் இருந்து வி.பெருமாள்பட்டி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ முந்த முயன்றது. அப்போது எதிரே ராஜபாளையத்தில் இருந்து தேனி நோக்கி அரசு பஸ் வந்ததால், ஆட்டோ இரு பஸ்களின் நடுவே சிக்கி விபத்திற்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த வில்லாணியை சேர்ந்த இந்துராணி (53), வி.பெருமாள்பட்டியை சேர்ந்த குருவம்மாள் (65), சின்னம்மாள் (45), கருப்பாயி (60) ஆகியோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே இரு பஸ்களின் நடுவே ஆட்டோ சிக்கி விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

The post உசிலம்பட்டி அருகே அரசு பஸ்கள் நடுவே ஆட்டோ சிக்கி விபத்து 4 பெண்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Usilampatti ,M. Kallupatti ,Usilambatti… ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி பகுதியில் கரும்பு விவசாயிகள் மானியம் பெறலாம்