×

டாக்டர் தேவ பிரசாத் ஜெயசேகரனுக்கு தங்கப்பதக்கம்

ராஜாக்கமங்கலம், செப். 23 : தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிறுநீரக மருத்துவர்கள் சங்கங்கள் சார்பில் குமரி மாவட்டத்தில் தேசிய அளவில் கடந்த 15 ம் தேதி தொடங்கி 17 ம் தேதி வரை 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் (TAPASUCON 2023), நாகர் கோவில் டாக்டர்.ஜெயசேகரன் மருத்துவமனையின் நிர்வாகியும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிறுநீரக மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர். தேவபிரசாத் ஜெயசேகரன் சிறுநீரகவியலில் சிறப்பாக செயல் புரிந்ததை பாராட்டி 2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சங்கத்தின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

The post டாக்டர் தேவ பிரசாத் ஜெயசேகரனுக்கு தங்கப்பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Deva Prasad Jayasekaran ,Rajakamangalam ,Tamil Nadu ,Pondicherry Urology Associations ,Kumari district ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!