×

எம்.எட் படிப்புக்கு விண்ணப்ப பதிவு வரும் 25ம் தேதி முதல் ஆன்லைனில் தொடக்கம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: எம்.எட் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு வரும் 25ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தொடங்க உள்ளது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியை தவிர மீதம் உள்ள 6 கல்லூரிகளில், முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்) 2023-24ம் ஆண்டு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு வரும் 25ம் தேதி முதல் தொடங்குகிறது. ஒரு கல்லூரிக்கு 50 இடங்கள் வீதம் 300 இடங்கள் உள்ளன. விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக கட்டலாம். இணையதளம் மூலமாக செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் செலுத்தலாம். கூடுதல் தகவல்களை www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post எம்.எட் படிப்புக்கு விண்ணப்ப பதிவு வரும் 25ம் தேதி முதல் ஆன்லைனில் தொடக்கம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Directorate of College Education ,Chennai ,
× RELATED கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும்...