×

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சக்கரைப்படித்துறை அருகே மர்மமான முறையில் 2 பேர் இறந்து கிடப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த 2 பேரும், கும்பகோணம் பெருமாண்டி தெருவை சேர்ந்த பாலகுரு (48), கர்ணக்கொல்லை கீழத்தெருவை சேர்ந்த சௌந்தர்ராஜன் (42) என்பது தெரியவந்தது. நண்பர்களான இருவரும் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு மதுஅருந்தி கொண்டிருந்த போது போதை ஏறாததால் மதுவில் சானிடைசர் கலந்து குடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் வயிற்றுவலி வராமல் இருக்க ஒரு மாத்திரையை சாப்பிட்டுவிட்டு குடித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சானிடைசர் கலந்து குடித்ததால் இறந்தார்களா என விசாரித்து வருகின்றனர்.

The post மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Kumbakonam East Police Station ,Chakkaraipettura, Thanjavur district ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...