×

உள்துறை செயலருக்கு ரூ.10,000 அபராதம்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(33). இவர் கடந்த 2020ல் 7 வயது சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம், வேலுச்சாமிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு தொகை வழங்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு தொகையை கேட்டு சிறுமியின் தாய் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஏற்பட்ட காலதாமதத்திற்காக உள்துறை முதன்மை செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

The post உள்துறை செயலருக்கு ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Home Secretary ,Madurai ,Veluchami ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை