×

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி: தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் உத்தரவு

சென்னை: அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்தார். இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்திடம் சங்கர் (சவுக்கு சங்கர்) மனு கொடுத்தார்.

மனுவை விசாரித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நீதிபதி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்ததை நீதிமன்றத்தின் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றபோது ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளார். ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை. அது நீதிமன்ற அவமதிப்பு செயல் ஆகாது. எனவே, மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அனுமதி கோரியதில் முகாந்திரம் இல்லை. சங்கரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி: தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DMK Organization ,RS Bharti ,Tamil ,Nadu ,Chennai ,Justice ,Anand Venkatesh ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் கைது...