×

ஒன்றிய அரசு செஸ் வரியை ரத்து செய்தால் பெட்ரோலை ரூ.77க்கு விற்கலாம்: சந்திரசேகரராவ் ஆலோசனை

திருமலை: ஒன்றிய அரசு செஸ் வரியை ரத்து செய்தால் பெட்ரோலை ரூ.77க்கு விற்பனை செய்யலாம் என்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:  ‘மத்தியில் பாஜ அரசு பதவியேற்றபோது 2014ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை லிட்டருக்கு டாலர் மதிப்பில் 105ஆக இருந்தது. அப்போது, நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது, டாலர் மதிப்பில் 80ஆக உள்ள நிலையில் பெட்ரோல் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல்  உலகச் சந்தையில் டாலரின் மதிப்பில் குறைவாக இருந்தாலும் செஸ் வரி விதிப்பின் காரணமாக தற்போது பொதுமக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது. செஸ் வரியை ரத்து செய்தால் 2014ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ரூ.77க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பனை செய்யலாம். பாஜ ஆளும் மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், ஒன்றிய அரசு கண்துடைப்பாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. ஒன்றிய அரசு  செஸ் வரியை முற்றிலும் ரத்து செய்யக்கோரி போராடுவோம்’. என்றார்….

The post ஒன்றிய அரசு செஸ் வரியை ரத்து செய்தால் பெட்ரோலை ரூ.77க்கு விற்கலாம்: சந்திரசேகரராவ் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chandrasekarao ,Tirumalai ,Telangana State ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...