×
Saravana Stores

திருப்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் திடீர் மோதல்: இந்து முன்னணியினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் நடந்த விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலத்தில் இந்து முன்னணியினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். திருப்பூரில் தாராபுரம் சாலை செல்லம் நகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று புறப்பட்டது.

புதிய பேருந்து நிலையத்தில் நடந்த ஊர்வலத்தின் போது மேலம்பாளையம், ஆட்டுப்பாளையம் பகுதியிலிருந்து விநாயகர் சிலைகளை யார் முன்னாள் எடுத்து செல்வது என்பதில் இந்து முன்னணியினரிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நிமிலியில் வசந்தகுமார் என்பவர் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரிடம் சில இளைஞர்கள் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் விநாயகர் சிலைகள் கரைப்பு முடிந்தவுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது உரிமையாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

The post திருப்பூரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் திடீர் மோதல்: இந்து முன்னணியினரிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vinayakar ,Tiruppur ,Vineyagar ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை; புலம்பெயர்...