×

வெம்பக்கோட்டையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் சரி செய்ய மக்கள் கோரிக்கை

 

ஏழாயிரம்பண்ணை, செப்.22: வெம்பக்கோட்டையில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. உடைப்பை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை ஊராட்சி பகுதியில் 20 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டம் போன்றவை உள்ளது. மானூர், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய் வழியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. குண்டாயிருப்பு பகுதிகளில் ராட்சச குழாய் அமைத்து மானூர் குடிநீரானது அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு தினந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குண்டாயிருப்பு பேருந்து நிலையம் அருகே சாலையில் வாகனங்கள் செல்லும் பொழுது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையின் நடுவே பெருக்கெடுத்து ஓடுகிறது. குழாய் உடைந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அதனை தற்போது வரை சரிசெய்யவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைவதுடன் கோடைகாலங்களில் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். குழாய் உடைப்பை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வெம்பக்கோட்டையில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் சரி செய்ய மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vembakottai ,Ejayarampannai ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு