
பெரியகுளம், செப்.22: பெரியகுளம் நகராட்சியின் குப்பை கிடங்கில் தொடர்ந்து பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி அணைத்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. இந்த குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகே எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட இருளாயியம்மாள் காலனி, இ.புதுக்கோட்டை, ஜெ.ஜெ.காலனி, எ.புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் நாள்தோறும் தீ பற்றி எரிவது தொடர்ந்து வருவதால் அருகே உள்ள கிராம மக்களுக்கு மூச்சு திணறல், இருமல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே தீ பற்றி அதிக புகை வரும் நேரத்தில் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து தீயை அணைத்து வருகின்றனர். இந்நிலையில் குப்பை கிடங்களில் நேற்று பற்றி எரிந்த தீயை பெரியகுளம் தீயணைப்புதுறையினர் 3 மணி நேரம் போராடி அணைத்தனர். பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் கண்காணித்து குப்பைகளில் தீ வைப்பவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பையில் தீ பற்றாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post பெரியகுளம் குப்பை கிடங்கில் தீ 3 மணிநேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.