×

டூவீலர்கள் மோதியதில் வங்கி ஊழியர் பலி

 

திருப்புவனம் செப்:22 திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் வீரசங்கர் என்ற சீனு(26). இவர் தனியார் வங்கியின் மகளிர் குழு கடன் வசூல் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து சிவகங்கையிலிருந்து திருப்புவனத்திற்குதனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். பூவந்தி அருகே உள்ள கழுங்குபட்டி பகுதியில் வந்தபோது எதிரே வந்த டூவீலர் அவரது டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வீரசங்கர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். எதிரில் டூவீலரில் வந்த தேனியை சேர்ந்த திருமலை (60) காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதியதில் வங்கி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Seenu ,Weerashankar ,Tiruppuvanam Pudur ,Dinakaran ,
× RELATED ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு...