×

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு

சோழவந்தான், செப். 22: சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் தூய்மை பணிகளை இளைஞர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் இணைந்து மேற்கொள்வதற்கு அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து பொது இடங்களில் கழிவுகளை கொட்டாமல் பேரூராட்சி வாகனத்தில் வழங்கி நகரை தூய்மையாக வைத்து கொள்ள அனைவரும ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. பின்னர் தூய்மை பணி ஆய்வாளர் முருகானந்தம், ‘பொதுமக்கள், வியாபாரிகள் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பேரூராட்சி வாகனங்களில் வழங்க வேண்டும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Cholavandan Municipality ,Cholawandan ,Swachhaye Seva ,Cholavanthan Municipality ,Borough Council ,President Jayaraman ,
× RELATED சோழவந்தான் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை