×

பாலக்காடு சந்திப்பில் 2வது வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு

 

பாலக்காடு, செப். 22: கேரளாவில் முதற்கட்டமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரல்-காசர்கோடு-திருவனந்தபுரம் சென்டரல் அனுமதிக்கப்பட்டு இயங்கி வருகின்றது. தற்போது 2வதாக இயக்கப்படவுள்ள ஆராஞ்சு நிறம் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்த ரயிலுக்கு ரயில்வே நிர்வாகத்தினரும், பொதுமக்களும் மற்றும் பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து ஆலப்புழா, திருச்சூர், ஷொர்ணூர் வழியாக காசர்கோட்டிற்கு 2வது வந்தே பார்த் ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் செவ்வாய் முதல் இதன் இயக்கம் கேரளாவில் நடைபெறவுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் காசர்க்கோடு ரூட்டில் 8 மணி நேரமும், காசர்க்கோடு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரூட்டில் சர்வீஸ் நேரம் 7.55 மணி நேரமும் வருவதாக ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த ரூட்டில் மொத்தம் 537.07 கிலோ மீட்டர் பயண தொலைதூரம் உள்ளது.

The post பாலக்காடு சந்திப்பில் 2வது வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad junction ,Palakkad ,Vande Bharat Express ,Thiruvananthapuram Central ,Kasarkodu ,Kerala ,Dinakaran ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...