×

நீலகிரி மாவட்ட திமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

 

ஊட்டி,செப்.22:நீலகிரி மாவட்ட திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கூட்டம் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வதித்தார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 24ம் தேதி திருப்பூர் மாவட்டம் படியூரில் திமுக., தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் “வாக்குச்சாவடி நிலை முகவர்கள்” பயிற்சி பாசறை கூட்டத்திற்கு நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரையும் தவறாது கலந்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது என தீர்மனிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன் பாபு, ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத்அலி, பரமசிவன், லாரன்ஸ், காமராஜ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், ரமேஸ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், சுப்ரமணி, சின்னவர், மார்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்ட திமுக நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri District DMK City ,Nilgiri district ,DMK ,Ooty Kalyanir Vidyalaya.… ,Nilgiri district DMK ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்