×

தலைவிரி கோலமாக வந்த 3 மாணவிகளின் முடியை வெட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்: ஆந்திர அரசு பள்ளியில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் சூர்யநாராயணபுரத்தில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணா நகராட்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அழகாக தலை சீவி ஜடை பின்னல் போட வேண்டும் என விதி முறை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அரசு பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் தலைமுடியை சீவி ஜடை பின்னல் போடாமல் தலை விரி கோலமாக வகுப்புக்கு வந்தனர்.

அப்போது பள்ளி தலைமை ஆசிரியை மங்காதேவி, எச்சரித்து வந்தார். ஆனால் தலைமை ஆசிரியை சொன்னதை காதில் வாங்காத 8 மற்றும் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மீண்டும் தலைவிரி கோலமாக பள்ளிக்கு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியை மங்காதேவி மாணவிகளின் தலைமுடியை கத்திரித்தாராம்.

இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அவர்கள் மாணவிகளின் முடியை வெட்டிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவிகளின் முடியை வெட்டிய தலைமை ஆசிரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

The post தலைவிரி கோலமாக வந்த 3 மாணவிகளின் முடியை வெட்டிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்: ஆந்திர அரசு பள்ளியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Govt. ,Tirumala ,Sarvapalli Radhakrishna Municipal School ,Suryanarayanapuram, Kakinada, East Godavari District of ,Andhra Pradesh ,Andhra Government School ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ