×

அப்போலோவில் புற்றுநோய் சிகிச்சை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு

சென்னை: அப்போலோ துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது: சென்னையில் தொடங்கப்பட்ட அப்போலோ கேன்சர் சென்டர், புற்றுநோய்க்காக முதல் தனிப்பட்ட மருத்துவமனையாகும். மிக முக்கியமாக, புரிந்துணர்வு, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை அடங்கிய ஒரு வலுவான கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் வெற்றி பெறப்பட்டுள்ளது. மருத்துவ இடையீட்டு சிகிச்சை என்பதையும் கடந்து, நோயாளியின் நலனை மையமாக கொண்ட முழுமையான பராமரிப்பை வழங்குவது பொறுப்புறுதியும், அர்ப்பணிப்பும் தளர்வின்றி இருந்து வருகின்றன.

இதன்மூலம், லட்சக்கணக்கான நோயாளிகள் மற்றும் குடும்பங்கள் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை உருவாக்கியிருக்கிறோம். அப்போலோ கேன்சர் சென்டரின் பாரம்பரியம் என்பது, நம்பிக்கையையும், குணமாக்கலையும் மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒரு வலுவான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கிறது. சேவையாற்றும் சமூகத்தினரோடு, கைகோர்த்து இனிவரும் காலங்களிலும் நம்பிக்கையோடு மேற்கொள்ளும் பயணம் குறித்து நாங்கள் உற்சாகத்தோடு இருக்கிறோம்.

புற்றுநோயியல் மற்றும் இண்டர்நேஷனல் துறையின் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி கூறியதாவது: உலக ரோஜா தினத்தோடு ஒருங்கிணைந்து அனுசரிக்கப்படும் அப்போலோ கொண்டாட்டம், புற்றுநோய் சிகிச்சை தளத்தில் தளராத அர்ப்பணிப்பும், சேவையும் நிரம்பிய 30 ஆண்டுகளின் சாதனையை நினைவூட்டுகிறது. பாதகமான எதிர்மறை நிகழ்வுகளையும், வெற்றிக்கான தனிநபர்களை ஏதுவாக்குகிறவாறு நம்பிக்கையையும், மீண்டெழும் திறனையும் மற்றும் மனஉறுதியையும் உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளில் ஆழமான பொறுப்புறுதிக்கு இந்த 30 ஆண்டுகள் பணியானது, நேர்த்தியான சாட்சியமாக திகழ்கிறது. நோயாளிகளின் நம்பிக்கையையும், தைரியத்தையும் நினைவுகூர்வதில் அதிகம் பெருமைப்படுகிறோம். எண்ணிலடங்காத வெற்றிக்கதைகள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உத்வேகமளிக்கின்றன. இனிவரும் காலத்தில், உலகளவில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த உறுதி கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பம் மற்றும் கனிவான புரிந்துணர்வின் மூலம் இதை சாதிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அப்போலோவில் புற்றுநோய் சிகிச்சை தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Apaollo ,Apolo ,Vice President ,Prita Reddy ,Apolo Cancer Centre ,Chennai ,Aollo ,
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் நாளை இயங்கும்