×

கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் மற்றும் வார்டன்களிடையே மோதல்!

கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் மற்றும் வார்டன்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் படுகாயமடைந்த 4 வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மரத்தின் மீது ஏறி பிளேடால் அறுத்துக்கொண்டு காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதிகள் சிலர் மரத்தின் மீதேறி தங்களின் கைகளை பிளேடால் கிழித்துக்கொண்டதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கைதிகள் தாக்கியதில் வார்டன்கள் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வல்வெளி இரண்டாவது பிளாக் சிறை வார்டன்கள் வழக்கம் போல் சோதனைக்கு சென்றபோது கைதிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கூடுதலாக 2 வார்டன்கள் அங்கு வந்தபோது, மொத கைதிகளும் அங்கே ஒன்றாக கூடி அங்கு இருந்த 4 வார்டன்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கே வந்த காவலர்கள் மோதலில் ஈடுப்பட கைதிகளை லத்தி சார்ஜ் செய்து விரட்டியுள்ளார். கைதிகள் மறைத்து வைத்திருந்த பிளேடால் கைகளை கிழித்துக்கொண்டு லத்தி சார்ஜ் செய்யக்கூடாது என்று ரகளையில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனால் அங்கே பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கே இருந்த உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வார்டன்கள் 4 பெரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைகளை கிழித்துக்கொண்டு 7 கைதிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதிகளின் அறைக்குள் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post கோவை மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் மற்றும் வார்டன்களிடையே மோதல்! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Central Jail Complex ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...