×

700 மூட்டை பருத்தி ₹15 லட்சத்திற்கு ஏலம்

மல்லசமுத்திரம், செப்.21: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், 700 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.இதில் சுரபி ரகம் குவிண்டாலுக்கு ₹6320 முதல் ₹7740 வரையிலும், பி.டி. ரகம் ₹6070 முதல் ₹7250 வரையிலும், கொட்டு பருத்தி ₹3780 முதல் ₹5630 வரையிலும் என, மொத்தம் ₹15 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

The post 700 மூட்டை பருத்தி ₹15 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Thiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,
× RELATED மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்