×

இட ஒதுக்கீட்டை தாமதிக்கும் விதிகளை கைவிட வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

லக்னோ: லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மாயாவதி, ‘‘பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் பலன் அடுத்த 15 அல்லது 16 ஆண்டுகள் அல்லது பல தேர்தல்களுக்கு பெண்களை சென்றடையாத வகையில் இந்த மசோதாவில் சில விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

அதனை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக செயல்படாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பது வெளிப்படையான உண்மை. பின்னர் எல்லை நிர்ணயம் செய்வதற்கும் பல ஆண்டுகள் ஆகும். அதன் பின் தான் இட ஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்படும். மசோதாவை நடைமுறைப்படுத்துவதை தாமதிக்கும் விதிகளை அரசு கைவிட வேண்டும்” என்றார்.

The post இட ஒதுக்கீட்டை தாமதிக்கும் விதிகளை கைவிட வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mayawati ,Lucknow ,Bahujan Samaj Party ,
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு