×

அமித்ஷா 20 இடங்களை கேட்கிறார் சீட்டு, நோட்டுக்காகவே அதிமுக – பாஜ சண்டை: வேல்முருகன் எம்எல்ஏ கணிப்பு

விழுப்புரம்: வரும் மக்களவை தேர்தலில் அமித்ஷா 20 இடங்களை கேட்டதால், சீட்டு, நோட்டுக்காகவே அதிமுக, பாஜ சண்டையிட்டு கொள்கிறது என தவாக வேல்முருகன் எம்எல்ஏ கூறினார். விழுப்புரத்தில் தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறியதாவது: துணை ராணுவத்தின் துணைகொண்டு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஒன்றிய பாஜ அரசை அகற்றவேண்டும் என்ற நோக்கில்தான் மதசார்பற்ற கூட்டணியில் நாங்கள் பயணிக்கிறோம். எடப்பாடியை, அமித்ஷா அழைத்து 20 சீட்டு வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி உடன்படாததால் அமித்ஷாவுக்கும், எடப்பாடிக்கும் ஏற்பட்ட இந்த முரணை பெரிதாக்கி தனது சீட்டுபேர வலிமையை பாஜவிடமிருந்து குறைத்து தங்கள் கட்சியினுடைய வேட்பாளர்களை அதிகம் நிறுத்துவதற்கு ஒரு யுக்தியைத்தான் எடப்பாடியும், அமித்ஷாவும் மேற்கொண்டுள்ளனர். முழுக்க, முழுக்க அரசியல் ரீதியான நகர்வுகள், பேச்சுக்கள். நேற்று கூட்டணியை விட்டு சென்று விட்டதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்று ஒரு சுற்றறிக்கை வருகிறது. அதிமுகவின் 2ம்கட்ட தலைவர்கள் அமுக்கிவாசியுங்கள் என்று. இதுஒரு சீட்டு, நோட்டுக்கான மறுவடிவ அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமித்ஷா 20 இடங்களை கேட்கிறார் சீட்டு, நோட்டுக்காகவே அதிமுக – பாஜ சண்டை: வேல்முருகன் எம்எல்ஏ கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,AIADMK ,BJ ,Velmurugan MLA ,Villupuram ,Lok Sabha elections ,BJP ,Baj ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு