×

கணவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததால் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து மனைவி தற்கொலை; திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் செட்டிபாளையம், பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பனியன் தொழிலாளி. இவரது மனைவி சொர்ணகலா கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரின் சந்தேகத்தால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிரது. இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏர்படதாக கூறப்படுகிரது.

இதை அடுத்து அக்கம் பக்கத்தினரின் சமரசத்தை தொடர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மனமுடைந்த சொர்ணகலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ” தனது சாவிற்கு கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என ” தனது செல்போனில் வீடியோ பதிவிட்தோடு, தனது மகளை தனது பெற்றோரும் தனது இரு தங்கைகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி அந்த வீடியோவை தனது தோழிகளுக்கும், குடும்பத்தாருக்கும், அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் சொர்ணகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் சொர்ணகலாவின் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அவரின் கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கணவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததால் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து மனைவி தற்கொலை; திருப்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Suresh Banyan ,Priyanka Nagar, Chettipalayam, Tirupur ,Sornakala ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்