×

கேரள அரசு நடத்திய பம்பர் லாட்டரி குலுக்களில் கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் வாளையாரில் நடராஜன் வாங்கிய TE230662 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு ரூ.25 கோடி முதல் பரிசு விழுந்தது. ரூ.5,000 கொடுத்து நடராஜன் வாங்கிய 10 லாட்டரி சீட்டுகளில் ஒன்றில் ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. முதல் பரிசை வென்ற நடராஜனுக்கு 30 சதவீதம் வருமானவரி போக ரூ.17.5 கோடி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள அரசு நடத்திய பம்பர் லாட்டரி குலுக்களில் கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

The post கேரள அரசு நடத்திய பம்பர் லாட்டரி குலுக்களில் கோவை அன்னூரைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி பரிசு appeared first on Dinakaran.

Tags : Natarajan ,Annoor ,Coimbatore ,Kerala government ,Palakkad ,Valayar ,Palakkad district ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே யூடியூப் பார்த்து கொள்ளை...