×

ஹோண்டா எலவேட்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், ஹோண்டா எலவேட் காரை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் மாதம் இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. சொகுசு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அனைத்து அத்தியாவசிய பண்புகளையும் இது கொண்டுள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் ஐ-விடெக் டிஓஎச்சி பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.

இது அதிகபட்சமாக 121 பிஎஸ் பவைரயும் 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.92 கி.மீ மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் இந்த இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

The post ஹோண்டா எலவேட் appeared first on Dinakaran.

Tags : Honda Elevate ,Honda Cars India ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…