×

கர்நாடகா ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை: கர்நாடகா ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி விவகாரம் குறித்து டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடகா எந்த காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை. கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது என்று நாங்கள் கூறினோம், ஆனால் அவர்கள் தண்ணீர் இல்லை என்று மறுக்கிறார்கள்.

தண்ணீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்காணித்து கூறும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தான் உண்டு. காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதா? என்று ஒன்றிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பினோம். காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் 13-ம் தேதி பேசும்போது வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு நீர் விட வேண்டும் என்று கூறியது. அடுத்த ஓரிரு நாட்களிலேயே வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீர் திறப்பை குறைந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் ஒழுங்காற்று வாரியம் நியாயமாக செயல்படுகிறதா, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறதா என்று வினவினார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடமும் இதே கேள்வியைதான் கேட்டேன். காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவரிடமும் ஒருதலைப்பட்சமாக என்று கேள்வி எழுப்பினேன். தமிழ்நாட்டின் காவிரி நீர் விவகாரத்தில் நாம் பெற்ற அனைத்து உரிமைகளும் உச்சநீதிமன்றம் மூலமே பெறப்பட்டது என்று குறிப்பிட்டார்.

The post கர்நாடகா ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Karnataka Regulative Board ,Minister Thurimurugan ,Chennai ,Minister ,Thurimurugan ,Caviri ,Delhi ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...