×

சத்தீஸ்கரில் ஆக்சிஸ் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை: ரூ.8 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்க நகை கொள்ளை

ராய்பூர்: சத்தீஸ்கரில் ஆக்சிஸ் வங்கிக்குள் புகுந்து ரூ.8 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்க நகை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தின் ஜெகத்பூர் பகுதியில் AXIS வங்கியின் கிளை அமைந்துள்ளது. இந்த கிளையில் நேற்று புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டினர். பின்னர் வங்கி மேலாளரை கத்தி போன்ற ஆயுதத்தால் பயங்கரமாக தாக்கி அவரிடம் இருந்த பெட்டகம், லாக்கர் அறையின் சாவியை பறித்துள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடுத்து சென்றனர். 7 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முதற்கட்டமாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் 7 கோடி ரூபாய் ரொக்கம் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போனதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். இதையடுத்து வங்கி மற்றும் சாலைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சத்தீஸ்கரில் ஆக்சிஸ் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை: ரூ.8 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்க நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Axis Bank ,Chattiskar ,Raypur ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறான் வங்கி...