×

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் டெல்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை..!!

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் டெல்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி விவகாரம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. ஆனால் கர்நாடகாவை பொறுத்தவரை, தங்கள் அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை, எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதாவது வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே, காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றுமின்றி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் என்பது நடைபெற்றது. அந்த கூட்டங்களில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் டெல்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க கர்நாடக குழு முடிவு செய்துள்ளது. நாளை உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அடுத்தடுத்து சந்திப்பு நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக மறுத்த நிலையில் ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் டெல்லியில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Siddaramaiah ,Delhi ,Karnataka ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...