×

போடிமெட்டு மலைச்சாலையில் கார் மீது அரசு பஸ் மோதி விபத்து: பயணிகள் உயிர்தப்பினர்

 

போடி, செப். 20: போடிமெட்டு சாலையில் கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். போடி அருகே சின்னமனூர் சாலையில் உள்ள டி.சிந்தலைச்சேரியை சேர்ந்தவர் அந்தோணி பிரிட்டோ. இவர், நேற்று முன்தினம் மாலை தனது காரில் கேரளாவில் இருந்து போடிமெட்டு வழியாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 5வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, போடியிலிருந்து போடிமெட்டு வழியாக கேரளா மாநிலம் ராஜாக்காடுக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. பஸ்சில வந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் வேறொரு பஸ்சில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை ஓட்டி வந்த போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த பகவதியிடம் விசாரித்து வருகின்றனர்.

The post போடிமெட்டு மலைச்சாலையில் கார் மீது அரசு பஸ் மோதி விபத்து: பயணிகள் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Podimetu ,Hill Road Accident ,Bodi ,Bodimetu road ,Bodimetu hill road ,Dinakaran ,
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...