×

ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க கூடாது: டிரைவர்கள் கோரிக்கை

 

ராமநாதபுரம், செப். 20: ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கக் கூடாது என கோரி ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் தீவு பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ள நிலையில், இடநெருக்கடி மற்றும் வருமானம் குறையும் வாய்ப்புள்ளதால் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க கூடாது எனக் கோரி பழைய ஆட்டோ ஓட்டுநர்கள், ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் சங்க துணை தலைவர் செந்தில் கூறும்போது.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் 600க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓட்டப்பட்டு வருகின்றது. ராமேஸ்வரம் குறுகலான பகுதியாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள பிரசிதிப் பெற்ற ராமநாதசுவாமி கோயில் இருப்பதால், அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பியே ஆட்டோ தொழில் நடந்து வருகிறது. ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பழைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வருவாய் குறைந்து குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள், இதனால் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க கூடாது என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.

The post ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க கூடாது: டிரைவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Ramanathapuram ,Ramanathapuram Ranthapuram ,
× RELATED 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட...