
சீர்காழி, செப்.20:சீர்காழி நகராட்சி சார்பில் குப்பைகள் தரம் பிரித்து வழங்க கோரி விழிப்புணர்வு பேரணி நடந்தது. சீர்காழி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் ரயில்வே நிலையம் முதல் கொள்ளிட முக்கூட்டு வரை பேரணி மூலமாக ஊர்வலம் சென்று, குப்பைகளை பொது இடங்களில் கொட்ட கூடாது, குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்கவும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செல்பி பாய்ண்ட் மூலம் பொதுமக்களை இப்பேரணியில் ஈடுப்படுத்தப்பட்டது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிடும் வகையில் கழிவுநீர் வாகனத்தை பயன்படுத்த 14420 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிலம்பாட்ட கலைஞர்கள் பல்வேறு வேடம் அணிந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இப்பேரணியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி அலுவலர்கள், பரப்புரையாளர்கள் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், இளைய வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் சிலம்பம் மாஸ்டர் விமல் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post சீர்காழி நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.