×

இன்ஸ்டாகிராமில் என் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி: சினிமா இயக்குநர் பாலா கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சினிமா இயக்குனர், பாலா சார்பில் அவரது உதவியாளர் மீனாட்சி சுந்தரம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். தவறான அணுகுமுறையுடன் கலைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு என் பெயரில் மர்ம நபர்கள் செய்திகள் அனுப்புவது என் கவனத்துக்கு வந்துள்ளது. நான் டிவிட்டரில் மட்டுமே உள்ளேன்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலை தளங்களில் எனக்கு கணக்கு இல்லை. இதுபோன்ற சம்பவம் எனது நற்பெயரையும், மதிப்பையும் கெடுக்கிறது. எனவே இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு பாலா அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டுள்ளார். சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இன்ஸ்டாகிராமில் என் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி: சினிமா இயக்குநர் பாலா கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Instagram ,Bala ,Chennai ,Meenakshi Sundaram ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை...