×

பொது இடங்களில் குப்பை கொட்டினால் சிறை: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே பிரம்மபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. நீதிபதிகள் பெச்சு குரியன் தாமஸ், கோபிநாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் கூறுகையில், கேரளாவில் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதை ஏற்றுக்கொண்ட டிவிஷன் பெஞ்ச், பொது இடங்களில் மீண்டும் மீண்டும் குப்பை கொட்டுபவர்களை சிறையில் அடைக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும்என்று டிவிஷன் பெஞ்ச் கருத்து தெரிவித்தது.

The post பொது இடங்களில் குப்பை கொட்டினால் சிறை: கேரள உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Brahmapuram ,Kochi, Kerala ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...