×

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

டெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது

The post மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் appeared first on Dinakaran.

Tags : Law Minister ,Arjun Ram Makwal ,Delhi ,Union Minister of Law ,Arjun Ram Macwal ,
× RELATED அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து...