×

நடிகர் மோகன்லால் வீட்டில் யானைத்தந்தங்கள் சிக்கிய விவகாரம் விசாரணை நடத்த 6 மாதம் இடைக்காலத் தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் கொச்சியிலுள்ள அவரது வீட்டிலிருந்து இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவற்றை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய லைசன்ஸ் பெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அந்த தந்தங்களை வருமான வரித்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மோகன்லால் மற்றும் அவருக்கு தந்தங்களை விற்பனை செய்தவர்கள் உள்பட 4 பேர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நவம்பர் 3ம் தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிர்த்து மோகன்லால் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி குஞ்சிகிருஷ்ணன், மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

The post நடிகர் மோகன்லால் வீட்டில் யானைத்தந்தங்கள் சிக்கிய விவகாரம் விசாரணை நடத்த 6 மாதம் இடைக்காலத் தடை: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Mohanlal ,Thiruvananthapuram ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...