×

10% இடஒதுக்கீடு விஷயத்தில் வன்னிய இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாது: சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பா.ம.க. இனியும் காத்திருக்க முடியாது. வன்னிய இளைஞர்கள் என்னைப் பார்த்து, 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆனது என்று கேட்கிறார்கள். அதற்கான பதில் என்னிடம் இல்லை. வன்னிய இளைஞர்களை நீண்ட காலம் கட்டுப்படுத்தியும் வைக்க முடியாது. இதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். சமூகநீதி நாளான நேற்று இதுகுறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 16 ம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்று, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post 10% இடஒதுக்கீடு விஷயத்தில் வன்னிய இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாது: சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vanniya ,Ramadoss ,CHENNAI ,BMC ,Vanniyars ,Vanniya… ,Ramdas ,Dinakaran ,
× RELATED ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர்...