×

அண்ணா, கலைஞர் ஆட்சியை போன்றே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி பெரியாருக்கே காணிக்கை: முதல்வர் சமூக வலைதளத்தில் பதிவு

சென்னை: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி, தந்தை பெரியாருக்கே காணிக்கை’ என பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம். மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து – மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது. பெண் விடுதலைக்காகவும், சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே. பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post அண்ணா, கலைஞர் ஆட்சியை போன்றே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி பெரியாருக்கே காணிக்கை: முதல்வர் சமூக வலைதளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Anna ,Muthuvel Karunanidhi Stalin ,Periyar ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,
× RELATED சென்னை அண்ணா மேம்பாலம் அருகே...