×

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றால் எச்1 பி விசா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவேன்: குடியரசு கட்சி போட்டியாளர் விவேக் ராமசாமி அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்ற தற்காலிக அனுமதி வழங்கும் எச்1 பி விசா, குடியேற்ற உரிமையல்லாத விசா வகையில் அடங்கும். குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எச்1 பி விசா மூலம் இந்தியா, சீன நாடுகளில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான ஐ.டி பணியாளர்களை நம்பியே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் 3 பிரிவுகளின்கீழ் 65,000 எச்1 பி விசாக்களை அமெரிக்க அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடும் விவேக் ராமசாமி கூறுகையில், எச்1 பி விசா ஒரு ஒப்பந்த அடிமைத்தனம். இது சிறப்பு தொழில்களில் வௌிநாட்டு பணியாளர்களை பணியமர்த்த அனுமதிக்கிறது. எச்1 பி விசா ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும் ஒரு ஒப்பந்த அடிமைத்தனத்தின் வடிவம்.
நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எச்1 பி விசா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ரோவன்ட் சயின்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2018 முதல் 2021 பிப்ரவரி வரை பொறுப்பு வகித்துள்ளார். அப்போது தன் நிறுவனத்தில் பணியாற்ற 29 எச்1 பி விசாக்களை அங்கீகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றால் எச்1 பி விசா நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவேன்: குடியரசு கட்சி போட்டியாளர் விவேக் ராமசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : US ,Republican ,Vivek Ramasamy ,WASHINGTON ,United States ,Dinakaran ,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்