×

கர்நாடகா இந்தியாவில்தான் இருக்கிறதா? ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அணைகளை கொண்டுவர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் 1987ல் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அன்புமணி அளித்த பேட்டி: தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்னையாக இருப்பது காவிரி விவகாரம்தான். கர்நாடகாவில் அரசியலுக்காகவும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் தூண்டிவிடுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது.

கர்நாடகா எதையும் மதிக்காமல் நடந்து வருகிறது. கர்நாடகா இந்தியாவில்தான் இருக்கிறதா? அல்லது தனி நாடா என்ற சந்தேகம் வந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் மேட்டூர் அணையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகா இந்தியாவில்தான் இருக்கிறதா? ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அணைகளை கொண்டுவர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,India ,Union ,Annepamani ,Thindivanam ,Periyar ,Tailapuram ,Viluppuram district ,Thindivam ,Bamaka ,Anpamani ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...