×

அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருக்க வேண்டும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை:சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா-கலைஞர் சிலை முன்பு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ‘சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு’ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, தாயகம் கவி, எழிலன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், அன்பகம் கலை, பகுதி செயலாளர் மா.அன்புதுரை, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பிரேமா சுரேஷ், இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் நுங்கை சுரேஷ் உள்பட ஏராளமானோர் பங்கேற்று ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக அனைவரும் பெரியார் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:

அண்ணா மலைக்கு அரசியல் தெரியவில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. அதுபோல அண்ணாவின் பெருமையை அண்ணாமலைக்கு தெரிவது நியாயம் கிடையாது. அவர் மரியாதையாக பேசுவது இனிமேல் நல்லது. காரணம் திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் அண்ணா, பெரியாரைப் பற்றி யார் பேசினாலும் அதை தாங்கிக் கொள்ளவோ, அதைப் பற்றி அனுமதிக்கவோ என்றைக்கும் தயாராக இல்லை. அதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அண்ணா மறைந்த நாள் முதல் அண்ணா என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள். நேற்று பிறந்த அண்ணாமலை, நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலை அண்ணாதுரை என்று ஆணவமாக அழைக்கிறார். அண்ணாமலைக்கு அழிவு நெருங்கி கொண்டிருக்கிறது. அண்ணாவைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அனுமதிக்க மாட்டோம். அண்ணாமலை தவறான புள்ளி விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். 1956ம் ஆண்டு அண்ணா பேசியதாக கூறுகிறார். 1949ல் திமுகவை துவக்கி தனி பெரும் தமிழ்நாட்டில் பவனி வந்தவர். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆடு மேய்க்கிற அண்ணாமலையை இன்று ஐபிஎஸ் ஆக உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது அண்ணா போட்ட பிச்சை, பெரியார் போட்ட பிச்சை. இல்லை என்று சொன்னால் அண்ணா
மலையின் நிலைமை என்னவாக மாறியிருக்கும். அண்ணாமலையின் பாட்டனார் இருந்திருந்தால் அண்ணாவின் பெருமையை சொல்லி இருப்பார். தமிழ்நாடு மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றால் அண்ணாமலை பணி செய்த கர்நாடகத்திற்கு மிக விரைவில் ஓடிப் போகின்ற நிலைமை வரும் என்றார்.

The post அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருக்க வேண்டும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anna ,Kazhagam Organisation ,R.R. S.S. Bharati ,Chennai ,Anna Anna Nawalayam ,Secretary of ,Dizhagam Organisation ,R.R. ,S.S. Social ,Bharati ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட...