×

மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கப் பார்க்கிறது பாஜக: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் முப்பெரும் விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் 5 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. திமுக முப்பெரும் விழாவில் பெங்களூரு த.ராமசாமிக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்:
வேலூருக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் கருணாநிதி. நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வளர்த்து எடுக்கப்பட்டவர்கள். 150 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைக்கனல் தெறித்த ஊர்தான் இந்த வேலூர். கலைஞர் நூற்றாண்டில் வேலூரில் முப்பெரும் விழாவை நடத்துவது மிக மிக பொருத்தமானது. வேலூரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஓக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி . சிப்பாய் கலகத்தின் நினைவு தூணை வேலூரில் நிறுவியர் கருணாநிதி.

தோன்றிய காலம் முதல் அதே இளைமை உணர்வோடு இருப்பது திமுக. திமுகவை வாழ வைத்துக் கொண்டு இருப்பது தொண்டர்கள்தான். திமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான். 2 கோடி தொண்டர்கள் அல்ல; 2 கோடி கொள்கைவாதிகள் நிரம்பிய கோட்டை திமுக.

இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க வேண்டிய போர்களத்தில் பயணித்து வருகிறோம். தமிழகத்தின் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்திஉள்ளது. மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கப் பார்க்கிறது பாஜக அரசு . நீட் தேர்வு குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. அனிதா முதல் ஜெகசீதன் வரை தற்கொலை தொடர்கிறது. கோச்சிங் சென்டர்கள் லாபத்திற்காகவே நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளனர். வட மாநிலங்களிலும் நீட் தேர்வால் மரணங்கள் நடக்கிறது. அது குறித்து ஆராய்ந்துள்ளனரா?

2015இல் மதுரையில் எஸ்ம்ஸ் அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை எங்கே வந்தது அந்த எய்ம்ஸ். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் பேசிவிட கூடாது என்பதற்காகவே மற்ற விஷயங்களை பேசி திசைதிருப்புகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகள் என்ன? 3 மடங்கு விலையை உயர்த்திவிட்டு வெறும் ரூ.200 மட்டும்துள்ளனர்; 9 ஆண்டுகளாக விலையை உயர்த்திவிட்டு ரூ.200 மட்டும் குறைத்தால் மக்கள் நம்புவார்களா? பாஜகவின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியே தீர வேண்டும் . ஊழல் முகத்தை மறைக்கவே பிற சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். மோடி ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.

முதல்வர் சொன்ன ரூ.1000 வந்தாச்சு.. பிரதமர் சொன்ன 15 லட்சம் எங்கே என கேட்கிறார்கள் பொதுமக்கள்.. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போவதால் இப்போது மற்ற விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்கள். லோக்சபா தேர்தலில் நிச்சயம் இந்தியா கூட்டணி வெல்லும்” என்றார்.

The post மாநில உரிமைகளை மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அழிக்கப் பார்க்கிறது பாஜக: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil ,Nadu ,Chief Minister ,M. K. Stalin ,DMK ,Triennial ,Vellore ,Pallikonda ,Vellore district ,M.K.Stalin ,General Secretary ,Duraimurugan ,M.K.Stal ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...