×

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க திட்டம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (18.09.2023) கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்-ஐ மாண்புமிகு தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் நாளை (18.09.2023) மாலை சந்தித்து கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு (திமுக) எஸ்.ஜோதிமணி (இ.தே.கா),
முனைவர் மு.தம்பித்துரை மற்றும் என்.சந்திரசேகரன் (அஇஅதிமுக), கே.சுப்பராயன் (சிபிஐ), பி.ஆர்.நடராசன் (சிபிஎம்), திரு.வை.கோ. (மதிமுக). முனைவர் தொல் திருமாவளவன் (விசிக), டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (இயூமுலீ) மற்றும் ஏ.கே.பி.சின்னராஜ் (கொமதேக) ஆகியோர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை சந்திக்க உள்ளனர்

The post காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Jal Shakti ,Minister ,Kaviri ,Chennai ,Union Government ,Karnataka ,Union Jal ,Shakti Minister ,
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...