×

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜிம்மில் வாலிபருக்கு ‘ஹார்ட் அட்டாக்’: மரணம் குறித்து விசாரணை

காஜியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருந்து பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர், ஜிம்மில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ள டிரெட்மில்லில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டிரெட்மில்லில் விழுந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்தால், அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அதற்குள் அந்த வாலிபர் இறந்தார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தகவலறிந்த ேபாலீசார் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கோடா பகுதியில் சம்பந்தப்பட்ட ஜிம் செயல்பட்டு வருகிறது. சித்தார்த் குமார் சிங் (26) என்ற வாலிபர் தினமும் டிரெட்மில்லில் உடற்பயிற்சி மேற்கொள்வார். அவ்வாறு டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த போது, அந்த வாலிபருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ’ என்றனர்.

The post பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜிம்மில் வாலிபருக்கு ‘ஹார்ட் அட்டாக்’: மரணம் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gajiabad ,Uttar Pradesh Gajiabad ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி